சிவகங்கை தீயணைப்பு மீட்பு நிலையத்தில் மானாமதுரை, ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த மாவட்ட துணை அலுவலராக பணிபுரிந்து வந்த நாகராஜன், கோழிப் பண்ணைக்கு தடையில்லா சான்று அளிக்க லஞ்சம் வங்கிய தீயணைப்புப் படை அலுவலர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை தீயணைப்பு மீட்பு நிலையத்தில் மானாமதுரை, ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த மாவட்ட துணை அலுவலராக நாகராஜன்(55) என்பவர் பணியாற்றி வந்தார். இவரிடம் கோழி பண்ணை வைப்பதற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு சூரக்குளத்தைச் சேர்ந்த கற்பக மூர்த்தி (36) என்பவர் அணுகியுள்ளார். அதற்கு, அவர் சான்றிதழ் அளிப்பதற்காக லஞ்சம் ரூ.5000 கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து கற்பக மூர்த்தி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோவிடம், கற்பகமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அவர்கள் வகுத்த திட்டத்தின்படி ரசாயனம் தடவிய பணத்தாள்களை கொடுத்து அனுப்பினர்.
இதையடுத்து ஆகஸ்ட் 21-ம் தேதி சிவகங்கை தீயணைப்பு நிலையத்துக்கு வந்த கற்பகமூர்த்தி, மாவட்ட துணை அலுவலர் நாகராஜனிடம் கையூட்டாக அவர் கேட்டிருந்த ரூ. 5000 பணத்தை கொடுத்தார். அப்பொழுது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ஜோசப் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜாமுகமது மற்றும் போலீஸார், நாகராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவர் கையூட்டாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்து இன்று மதியம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: சக்தி சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“