Advertisment

சமையலுக்கு தீ பற்ற வைத்த போது… மதுரை ரயில் விபத்து நடந்தது எப்படி? 5 பேர் கைது

அதிகரித்த வளிமண்டல அழுத்தம் காரணமாக ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த புதிய சிலிண்டரும் வெடித்து சிதறியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai train fire accident

Madurai train fire accident

மதுரை ரயில்வே சந்திப்புக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் கடந்த சனிக்கிழமை (ஆக்ஸ்ட் 26) ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 28) கைது செய்தனர்.

Advertisment

கைது செய்யப்பட்ட அனைவரும் ஆன்மீக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்த சுற்றுலா நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சத்யபிரகாஷ் ரஸ்தோகி (47), ஆர். நரேந்திரகுமார் (61), எம். ஹர்திக் சஹானி ( 24), ஜே. தீபக் (23) மற்றும் சி.சுபம் காஷ்யப் (19) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்த ஹரிஷ் குமார் பாஷிம், அங்குல் காஷ்யப் ஆகிய 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஆர்பி, மதுரை) கே.பொன்னுசாமி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு சட்டம், ஐ.பி.சி ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து குறித்து டி.எஸ்.பி கூறுகையில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 2 எரிவாயு சிலிண்டர்கள் உள்பட தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை சட்டவிரோதமாக சுற்றுலா நிறுவன ஊழியர்கள் கொண்டு வந்துள்ளனர்.

கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரில் கேஸ் கசிந்துள்ளது. அதை சரி செய்ய முயன்றுள்ளனர். அதேசமயம் அவர்கள் கொண்டு வந்த கேஸ் அடுப்பை பற்றவைக்க முயன்றபோது, ​​ஏற்கனவே கேஸ் கசிந்து வந்ததால் நொடியில் தீ பரவியது.

மேலும், அதிகரித்த வளிமண்டல அழுத்தம் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த புதிய சிலிண்டரும் வெடித்து சிதறியது என்று அவர் கூறினார். கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் செப்டம்பர் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் 63 பேர் தனியார் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் ரயிலில் ஆன்மீக சுற்றுலா செல்ல முன்பதிவு செய்து புறப்பட்டனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை சென்று கடந்த 26-ம் தேதி காலை மதுரை வந்துள்ளனர். சுற்றுலா நிறுவன ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு சமைத்து கொடுக்க சட்டவிரோதமாக கேஸ் அடுப்புகள், விரகு கட்டைகள், மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை ரயிலில் கொண்டு வந்துள்ளனர்.

சனிக்கிழமை காலை பயணிகளுக்கு கொடுக்க டீ தயார் செய்ய முயன்றபோது சிலிண்டர் வெடித்து ரயில் பெட்டியில் தீ மளமளவெனப் பரவியது. இதில் தீயில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment