தீவுத் திடலில் பட்டாசு விற்பனை - சுற்றுலாத்துறை அறிவிப்பு | Indian Express Tamil

வந்தாச்சு தீபாவளி.. பட்டாசு வாங்க, தீவுத்திடல் வாங்க..!

Chennai Tamil News: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

வந்தாச்சு தீபாவளி.. பட்டாசு வாங்க, தீவுத்திடல் வாங்க..!

Chennai Tamil News: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 11ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

வருடந்தோறும் தீபாவளி பண்டிகையின்போது சென்னை தீவுத் திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை நடைபெறும். அதை இந்த ஆண்டும் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். 

தீவுத் திடலில் அமைக்கப்போகும் கடைகளுக்கு இடையே மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு விற்பனைக்கு மொத்தம் 55 கடைகள் அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Firecrackers stall are planned at chennai theevuthidal