scorecardresearch

டூவிலரில் புகுந்த பாம்பு: நீண்ட நேரம் போராடி பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு – நீண்ட நேரம் போராடி பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

டூவிலரில் புகுந்த கட்டு விரியன் பாம்பு
டூவிலரில் புகுந்த கட்டு விரியன் பாம்பு

இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு – நீண்ட நேரம் போராடி பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் துணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த மதன் என்பவர் துணிகள் வாங்க வந்துள்ளார். அப்போது அந்த துணிக்கடையின் கீழே உள்ள பார்க்கிங்கில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

துணிகளை வாங்கி விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனத்தில் உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக போராடி இருசக்கர வாகனத்தில் இருந்த கட்டு விரியன் பாம்பை மீட்டனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் இருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த விஷத்தன்மை கொண்ட பாம்பினால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Firefighters successfully rescued snake after long hours