கோவை சூலூர் அருகே உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து மனித செய்கைகளைக் கொண்ட முதல் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
1600 மணி நேர உழைப்பில் உருவாகியுள்ள இந்த 6 அடி உயர 40 கிலோ எடை கொண்ட ரோபோ 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களைப் போலவே 26 விதமான சைகைகளை செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுடன் உரையாடவும் செய்யும்.
கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதானு பிள்ளை முன்னிலையில் இந்த ரோபோவை பேராசிரியர்களும் மாணவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இது குறித்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறுகையில், "மனிதர்களைப் போன்ற செய்கைகளை கொண்ட இந்த ரோபோ மருத்துவமனை, கல்லூரி, வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்த முடியும்" எனத் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“