ஒரே நேரத்தில் 5386 பேர் முதலுதவி... கோவை மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி!
A new initiative taken by Coimbatore district collector; for first time first aid given to 5386 Tamil News: கோவையில் முதலுதவி சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் 5386 பேர் முதலுதவி பயிற்சி செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
First aid - at the same time in Coimbatore (photos by rahman)
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
Advertisment
Coimbatore News in Tamil: கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வளாகத்தில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியருக்கு வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து, இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இந்த பயிற்சியினை துவங்கி வைத்தார். இதில் 5386 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஓரே இடத்தில் 5386 க்கும் மேற்பட்டோர் முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி எடுத்துக்கொண்டதை, ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பு உலக சாதனையாகவும் பதிவு செய்தது. மேலும் முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சியினை 5386 மாணவ,மாணவியருக்கு ஓரே இடத்தில் வழங்கினர்.
கோவை மாவட்டத்தில் உலக சாதனை படைத்துள்ளது எனவும் இதற்கான விருதை ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பிடம் இருந்து கோவை மாவட்ட நிர்வகமும், தன்னார்வ தொண்டு அமைப்பும் பெற்று இருப்பதாகவும் இது தவிர இன்று ஓரே நேரத்தில் அனைத்து மாணவ,மாணவியரும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியும் எடுத்து இருக்கின்றனர் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.