/tamil-ie/media/media_files/uploads/2018/01/a174.jpg)
பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தின் அடுத்த படியாக, வரும் பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவிருக்கிறார். இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகிகள் நியமனம், கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் உள்ளிட்ட பணிகளில் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்தக் கூட்டத்தில், வரும் 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஜனவரி.24ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆகும். இதற்கு முன்னதாக, நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தும், தனது முதல் பொதுக் கூட்டத்தை மதுரையில் தான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, சினிமாவின் 'உலகநாயகன்' கமல்ஹாசனும், தனது அரசியல் பிரவேசத்தின் முதல் படியாக தனது முதல் பொதுக் கூட்டத்தை மதுரையில் தொடங்கிவிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.