நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாநிலத்தின் முதல் பழங்குடி மாணவி

கடந்த ஆண்டு தன்னுடைய தந்தையை இழந்த அவர் பார்வைத் திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி தாயாருடன் வசித்து வருகிறார்

First tribal girl to pass class XII in Tamil Nadu village aces NEET : நீட் தேர்வு முடிவுகள் 2-ம் தேதி அன்று வெளியானது. கோவை மாவட்டம் நஞ்சப்பனூர் பகுதியில் வசித்து வரும் மலசர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்கவி என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று, மாநில அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடி மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார். நஞ்சப்பனூர் பகுதியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தன்னுடைய தந்தையை இழந்த அவர் பார்வைத் திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி தாயாருடன் வசித்து வருகிறார். நஞ்சப்பனூர் பகுதியில் 40 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

20 வயதான அந்த மாணவி கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அதில் 100 மதிப்பெண்கள் மட்டுமே அவர் பெற்றார். தன்னுடைய தந்தையின் இழப்பு, தன்னை அதிக கவனம் செலுத்தி நீட் தேர்வில் வெற்றி பெற வழி வகுத்தது என்று கூறினார்.

“இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் தன்னுடைய மக்கள் மருத்துவ வசதியை பெற அடையும் இன்னல்கள் தான் என்னை மருத்துவம் படிக்க ஊக்குவித்தது. நீட் தேர்வில் வெற்றி பெற்றது என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளாது. அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பும், அரசு தரப்பில் இருந்து உதவியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றும் சங்கவி கூறியுள்ளார்.

நீட் பயிற்சி மையங்களில் தங்கி படிக்கும் வாய்ப்பை பெற்ற சங்கவி கொரோனா நோய் தொற்றின் காரணமாக தன்னுடைய சொந்த கிராமத்திற்கு திரும்பி வரும் நிலை ஏற்பட்டது என்று கூறும் சங்கவி 12ம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதல் ரேங்க் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: First tribal girl to pass class xii in tamil nadu village aces neet

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com