கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/ddvcSgF63JbCn8luhiED.jpg)
அவர்கள் அளித்துள்ள மனுவில், பல ஆண்டுகளாக கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மீனவர்களாக மீன்பிடித்து வருவதாகவும் கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மீன் பாசி குத்தகை உரிமம் வழங்கப்படுவதாகவும் குத்தகை உரிமை முடிந்தவுடன் மீனவர்கள் அனைவரும் சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் மீன் பிடித்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்கள், தற்போதைய கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன், சில மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு சில குளங்களில் மீன்பிடிக்க அனுமதி தர மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/C7YgEFq2ao0Z03sOaqdC.jpg)
அந்தக் குளங்களில் மீன்பிடிக்க சென்றால் பாலமுருகன் தங்களை அச்சுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பெரும்பான்மையான மீனவ குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் கோவை வட்ட மீனவர் சங்க உறுப்பினர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“