/indian-express-tamil/media/media_files/u9fbeGpzxARLgNNOv7hB.jpg)
இது தொடர்பான வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.
ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் காகலடியில் மீன்பிடி வலையில் தவறுதலாக சிக்கிய 3 டால்பின் மீன்களை அப்பகுதி மீனவர்கள் மற்றும் தமிழக வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கடலில் விடுவித்தனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.
மேலும், டால்பின்களை காப்பாற்றிய மீனவர்களை வெகுவாக அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சில மீனவர்களின் வலையில் தவறுதலாக மூன்று டால்பின் மீன்கள் சிக்கின.
இதையடுத்து, அவற்றைக் காப்பாற்ற மீனவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Local fishermen and Tamil Nadu Foresters safely rescued and released 3 Dolphins accidently caught in fishing nets at Kakaladi in the Ramnathapuram District. Kudos to them. They will be honoured by the District Administration 👏👏#Dolphinrescue#everylifematters#savedolphinspic.twitter.com/3vZQj6jndy
— Supriya Sahu IAS (@supriyasahuias) February 11, 2024
ட்விட்டரில் இந்தப் போஸ்ட் பிப். 11ஆம் தேதி அன்று பகிரப்பட்டுள்ளது. இது 56,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 1,500 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. பலர் இடுகையின் கருத்துகள் பகுதியை எடுத்து கிளிப்புக்கு பதிலளித்தனர்.
நெட்டிசன்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒருவர் கிரேட் ஓர்க் எனப் பாராட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.