scorecardresearch

லூப் ரோட்டில் சாலை மறியல்: 18-ம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் மீனவர்கள்

மீன் கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி முயற்சித்ததால், மீனவ சமூகம் லூப் ரோட்டை மறித்து போராடியுள்ளது.

marina beach

சென்னை கலங்கரை விளக்கம் முதல் நொச்சி நகர் வரையிலான லூப் ரோட்டின் ஓரத்தில், கடைகளை வைக்கும் முடிவை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கிறது என்கிற காரணத்தால், இக்கடைகளை அகற்றுவதற்கு ஏப்ரல் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், தங்களது வியாபாரத்தை விடுத்து போராடி வந்தனர். பின்பு, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வருகைதந்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த பிரீசர் பெட்டிகளை அகற்ற ஆரம்பித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உடனடி வெளியேற்ற உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள், லூப் சாலையின் மேற்குப் பகுதியில் இருந்த மீன் கடைகளை ஏப்ரல் 12 அன்று இடித்துத் தள்ளினார்கள்.

ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில், அப்பகுதியை மீனவ சமூகத்தின் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகளுடன் தற்காலிகமாக வழங்கப்படும் வரை வெளியேற்ற உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

“இன்றைய போராட்டத்தின் தீவிரம் முன்பு இருந்ததைப் போல (ஏப்ரல் 12 மற்றும் 13) அதிகமாக இல்லை. ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பதால் பிரச்னையை தவிர்க்க முயற்சிக்கிறோம்,” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் மண்டல செயலாளர் ரவி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Fishing community blocks loop road protest