நாளை முதல் தாம்பரம் வரை செல்லும் 5 மின்சார ரயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி முதல் 5 மின்சார ரயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், ” கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்துக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து இரவு செல்லும் 5 மின்சார ரயில்கள் திங்கள்கிழமை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19 , இரவு 8.15, இரவு 8.55, இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.
மறுமார்க்கமாக இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, இரவு 9.45, இரவு 10.10, இரவு 10.25, இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும். மார்ச் முதல் ஞாயிற்றுகிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, இரவு 8.20, இரவு 8.40, இரவு 9, இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, இரவு 10.10, இரவு 10.35, இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“