scorecardresearch

குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு: என்ன நடந்தது? சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை நங்கநல்லூர் கோயில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

jiwal

சென்னை நங்கநல்லூர் கோயில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும்  நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

இந்நிலையில் இந்த ” 5 பேரின் உடல் உடனடியாக மீட்கப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள  அரசு மருத்துவமனைக்கு அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எத்தனை பேர் உடன் சென்றார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். சில அர்ச்சகர்கள் சாமி வழிபாடு செய்யச் சென்றுள்ளனர். அவர்கள் மீழ்கியபோது மற்றவரக்ளும் சென்று காப்பாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. 18 வயதுக்குள் சில இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 வழிபடும் நடைமுறைகள் பின்பற்றப்படாது என்பதை இப்போது சொல்ல முடியாது. அவர்களுடன் சென்ற மற்ற அர்ச்சகர்களை மீட்டுள்ளோம். குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது. மேலும் ஆழமாக இருந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் இந்த குளத்தை பயன்படுத்தும்போது, பார்த்து பயன்படுத்த வேண்டும் “ என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Five priest dead in chennai river naganallur