scorecardresearch

ஏர்போர்ட், சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர், பல்லாவரம்… சனிக்கிழமை சென்னையில் மோடி நிகழ்ச்சிகள் முழு விவரம்

நாளை 22,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

express news

சென்னைக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகைதருவதால், மீனம்பாக்கம் விமான நிலையம், சென்ட்ரல் ஸ்டேஷன், விவேகானந்தர் இல்லம், ராஜ்பவன், ஐ.என்.எஸ்., அடையார் ஹெலிபேட் ஆகிய இடங்களில் தீவிர பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 2:30 மணிக்கு சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

இதனால், நாளை 22,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சி.ஆர்.பி.சி.யின் 144வது பிரிவின் கீழ், வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையில், தாம்பரம் நகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறுகையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தாம்பரம் நகர காவல் எல்லை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு வான்வழி வாகனங்கள் மற்றும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தபிறகு, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

மாலை 6.30 மணிக்கு பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Five tier police arrangement for pm modi visit chennai

Best of Express