/indian-express-tamil/media/media_files/2025/10/16/lightening-dies-2-2025-10-16-21-14-41.jpg)
கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையின் போது மின்னல் தாக்கி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையின் போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலத்தில் களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது, இன்று (அக்டோபர் 16) மாலை திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், மின்னல் தாக்கி வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த 4 பெண்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, இவர் வயலில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். வயலில் வேலை செய்வதற்காக கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த சின்ன பொண்ணு (என்கிற) ராஜேஸ்வரி, தவமணி, பாரிஜாதம், கணிதா, ஆகிய 4 பேர் உரம் போட்டு களை எடுத்துக் கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் வியாழக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்பொழுது திடீரென்று இடி மின்னல் தாக்கியதில் அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த வயல் உரிமையாளர் ராஜேஸ்வரி, கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி, தவமணி, கணிதா, ஆகிய 5 பேர் மீது இடி மின்னல் தாக்கியதில் ராஜேஸ்வரி, பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி, கணிதா, சம்பவ இடத்திலேயே இறந்தனர். தவமணி பலத்த காயம் ஏற்பட்டு அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கி இறந்து போன ராஜேஸ்வரி, பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி, கணிதா ஆகிய 4 பேர் உடலை வேப்பூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு, இடிதாக்கி இறந்து போன உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட விருந்த நிலையில் அந்த கிராமத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
செய்தி: பாபு ராஜேந்திரன் கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.