விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. கோயில் பக்கத்தில் ஆறு ஒன்று ஓடுகிறது. இங்கு வரும் மக்கள் கோயில் சாமி தரிசனம் செய்து ஆற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி பலரும் குடும்பம் குடும்பமாக கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர். ஆற்றிலும் குளித்துள்ளனர். அப்போது, திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கரை திரும்ப முடியாமல் 9 பேர் சிக்கித் தவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். எனினும் ஆறு செல்லும் வனப் பகுதி தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பொதுமக்களை அனுமதித்த வனத்துறையினர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“