என்.சி.சி முகாம் : மாணவர் படையில் சிறந்து விளங்கிய திருச்சி மாணவி தங்கம் வென்றார்!

என்.சி.சி தான் எனக்குள் இருக்கும் மிகச்சிறந்த திறமைகளை வெளிக் கொண்டு வந்தது - ரேஷ்மா

By: January 30, 2020, 9:56:58 AM

Flight Cadet R Reshma from Trichy strikes gold at republic day  camp : தேசிய மாணவர்ப்படை என்று அழைக்கப்படும் என்.சி.சியின் அணி வகுப்பு நேற்று (29/01/2020) புதுடெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார் நரேந்திர மோடி. அணி வகுப்பினை கண்ட மோடி பிறகு என்.சி.சி. படைப்பிரிவில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்களையும் விருதுகளையும் வழங்கினார்.  சிறந்த சீனியர் விங் (விமானப்படை) பிரிவில் திருச்சியை சேர்ந்த ரேஷ்மா தங்கப்பதக்கம் வென்றார்.

திருச்சியை பூர்வீகமாக கொண்ட ரேஷ்மா, தமிழகம், புதுவை, அந்தமான் நிக்கோபர் தீவுகளின் பிரதிநிதியாக பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி ரேஷ்மாவை வாழ்த்தி அவருக்கு தங்கப் பதக்கத்தை வழங்கினார். பிஷப் ஹெபெர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி பயின்று வருகிறார் ரேஷ்மா. கடின உழைப்பு தான் இந்த இலக்கை அடைய உதவியது என்று கூறினார் ரேஷ்மா.

என்னுடைய பயிற்ச்சியாளர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். முதலில் நான் திருச்சி பகுதியில் இருக்கும் குழுவினருடன் போட்டியிட்டு தேர்வானேன். பிறகு தமிழகத்தில் இருந்து வந்த 6 குழுக்களிடம் போட்டியிட்டு தேர்வானேன். பிறகு தேசிய அளவில் இந்த வெற்றியை பெற்றுள்ளேன். இண்டெர்-குரூப் போட்டிகளும் இருந்தன. அதனை க்ளியர் செய்த பிறகு எழுதுத்தேர்வு, குரூப் டிஸ்கசன், இண்டெர்வியூ, மற்றும் ட்ரில், ஃபைரிங் போன்ற போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இம்மானுவேல் சகாயராஜ் என்பவர் தான் ரேஷ்மாவின் என்.சி.சி அலுவலர். திருச்சியில் இருந்து தங்கப்பதக்கம் பெறும் முதல் பெண் கேடெட் ரேஷ்மாவாக தான் இருப்பார் என்று அவர் கூறினார். ரேஷ்மாவின் தந்தை ராணுவதத்தில் உள்ளார். அவர் தான் என்.சி.சியில் சேருமாறு ரேஷ்மாவை வலியுறுத்தியுள்ளார். என்.சி.சி தான் எனக்குள் இருக்கும் மிகச்சிறந்த திறமைகளை வெளிக் கொண்டு வந்தது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஏர்ஃபோர்ஸில் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளார் ரேஷ்மா.

மேலும் படிக்க : சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்குமா? ஆச்சரியமடைய வைக்கும் புகைப்படங்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Flight cadet r reshma from trichy strikes gold at republic day camp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X