New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Indigo.jpg)
விமானத்தில் அவசரகால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது விமானத்தில் பயணம் செய்த தேசியக் கட்சியைச் சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் இதில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் விமானத்தில் பயணம் செய்த தலைவர்கள் 2 பேர் விமானத்தின் அவசர கதவை திறந்ததாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது.
இந்நிலையில், திருச்சியில் டிசம்பர் 10-ம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது, விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குரவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்பது தெரியவந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.