விமானத்தில் அவசரகால கதவை திறந்த பிரச்னை: 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை?

விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குரவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

airport authority, chennai, Trichy, indigo flight, flight emergency door opened issue

விமானத்தில் அவசரகால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது விமானத்தில் பயணம் செய்த தேசியக் கட்சியைச் சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் இதில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் விமானத்தில் பயணம் செய்த தலைவர்கள் 2 பேர் விமானத்தின் அவசர கதவை திறந்ததாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில், திருச்சியில் டிசம்பர் 10-ம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது, விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குரவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்பது தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Flight emergency door opened issue airport authority ministry order to inquiry at two leaders

Exit mobile version