விழுப்புரம் மாவட்டம் அரசூரில் மலட்டாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசூர் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் உள்ளது. இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு காரணங்கள் கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்களாக அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்க வில்லை. 3 நாட்களாக மின்சாரம் இல்லை. அரசு மற்றும் அரசு சார்பில் இதுவரை யாரும் தங்களை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்க வரவில்லை.
வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை. வெள்ளத்தில் பொருட்கள் அடித்து செல்லப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முறையான நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் தொடர்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“