விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் ரூ.2000 பணம் மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்தநிலையில், முதல்வரின் சிறப்பு செயலாளர் அமுதா அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதை குடோனுக்கு சென்று பார்வையிட்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது மின்விநியோகம் சீராகி கொண்டு வருகிறது. வீடுகள் நீர் நிலைகளில் 100% பணி முடிவடைந்து உள்ளது.தற்போது விவசாயக் கரண்ட் மட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
முதல்வர் அறிவித்துள்ள ரூபாய் 2000 மற்றும் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவை பாக்கெட் செய்யும் பணி ஆறு குடோன்களில் நடக்கிறது.
இன்று முதல் தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்தப் பொருள்கள் சென்றடையும். மாவட்ட நிர்வாகம் இதற்கு கணக்கெடுப்பை கொடுத்துள்ளனர் என அமுதா தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“