சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் கட்டி நிற்கிறது. மேலும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நிற்பதால், சென்னை மாநகராட்சி சார்பாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முன்பே கணித்தது போல சென்னையில், இந்த வாரம் மழை அடித்து துவைக்க தொடங்கியிருக்கிறது. நேற்று மாலை முதல் இரவு முழுவதிலும் சென்னையில் கனமழை பெய்திருக்கிறது. அரை மணி நேரம் மழை என்றாலே சென்னை வீதிகளில் தண்ணீர் நிற்கும். இதில் தொடர்ந்து 4 மணி நேரம் மழை பெய்தால் என்ன ஆவது. சென்னை அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி திருமங்கலம், கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, அம்பத்தூர், மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆவடி,பட்டாபிராம் உள்ளிட்ட பகுதியில் தற்போதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வில்லிவாக்கம் – 10 செமீ, சென்னை நுங்கம்பாக்கம் -7.2 செமீ, சென்னை நந்தனம் – 5 செமீ மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில் மழையால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் அளவை கவனிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.