கோவை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதியை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், குனியமுத்தூர் 88-வது வார்டு கே.ஜி.கே சாலை மற்றும் 87-வது வார்டு குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதனால், செங்குளம் நிறைந்து அதன் தண்ணீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது.
குடியிருப்பு பகுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் இப்பகுதிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
இது மட்டுமின்றி கழிவுநீரும் இத்துடன் கலந்துள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி - பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“