தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர் மழையால், ஏரிகள், அணைகள் நிரம்பி வருவதால், பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால், அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எட்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
செங்கல்பட்டு
சராசரி அளவைவிட செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தாண்டு 95 முதல் 100 விழுக்காட்டிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 50 விழுக்காடு நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Flood risk advisory for Chengalpattu district pic.twitter.com/t1NaHS1rrm
— TN SDMA (@tnsdma) November 10, 2021
மயிலாடுதுறை
சராசரி அளவைவிட மயிலாடுதுறையில் மாவட்டத்தில் இந்தாண்டு 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது.பெரும்பாலான நீர்நிலைகள் 50 முதல் 100 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Flood risk advisory for Mayiladuthurai district pic.twitter.com/jhzlCH7nUZ
— TN SDMA (@tnsdma) November 10, 2021
திருவாரூர்
சராசரி அளவைவிட திருவாரூர் மாவட்டத்தில் இந்தாண்டு 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது.பெரும்பாலான நீர்நிலைகள் 60 முதல் 70 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Flood risk advisory for Thiruvarur district pic.twitter.com/uAO4qs351s
— TN SDMA (@tnsdma) November 10, 2021
கடலூர்
சராசரி அளவைவிட கடலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது.பெரும்பாலான நீர்நிலைகள் 60 முதல் 70 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Flood risk advisory for Cuddalorei district pic.twitter.com/azkvuuBrFV
— TN SDMA (@tnsdma) November 10, 2021
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் சராசரி மழை அளவை விட இந்தாண்டு அதிகளவில் 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 70 முதல் 80 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Flood risk advisory for Nagapattinam district pic.twitter.com/Yer6uzNX5D
— TN SDMA (@tnsdma) November 10, 2021
திருநெல்வேலி
நாகப்பட்டினத்தில் சராசரி மழை அளவை விட இந்தாண்டு அதிகளவில் 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 50 முதல் 60 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Flood risk advisory for Tirunelveli district pic.twitter.com/YZtBLDxAIK
— TN SDMA (@tnsdma) November 10, 2021
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சராசரி மழை அளவை விட இந்தாண்டு அதிகளவில் 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 50 முதல் 60 விழுக்காடு வரை நிறைந்துள்ளது.
Flood risk advisory for Thoothukkudi district pic.twitter.com/EkJGCT6NIs
— TN SDMA (@tnsdma) November 10, 2021
விழுப்புரம்
விழுப்புரத்தில் சராசரி மழை அளவை விட இந்தாண்டு அதிகளவில் 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 50 முதல் 60 விழுக்காடு வரை நிறைந்துள்ளது.
Flood risk advisory for Villupuram district pic.twitter.com/Ts1GJERC4C
— TN SDMA (@tnsdma) November 10, 2021
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.