வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு, 2022 ஜனவரியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆளும் திமுகவை சிந்திக்கத் தூண்டியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து ஆளும் திமுகவில் உள்ள தேர்தல் வியூகம் வகுக்கும் தலைவர்கள் இடையே இப்போது மாறுபட்ட கருத்து நிலவுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் கால அவகாசம் கோருமாறு திமுகவில் உள்ள சில தேர்தல் வியூகம் வகுக்கும் தலைவர்கள் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக, மாநிலத் தேர்தல் ஆணையம் ஆயத்தப் பணிகளைத் தொடங்கி, குடிமை அமைப்புகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளம் காரணமாக தேர்தலை சில வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு திமுகவில் தேர்தலை திட்டமிடுபார்கள் கட்சி தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உயர்மட்டத்தில் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விவாதம் நடந்ததாக தகவலறிந்த திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமிழ்நாடு அரசில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் நேரத்தைக் கோருவது குறித்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்துள்ளனர். இருப்பினும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக நகர்ப்புற உள்ளட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற வேகத்தில் உள்ளது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசல்களால் திணறி வருகிறது. நகர்ப்புறங்களில் எப்போதும் திமுக பலமாக இருக்கும். திமுக அரசும் நல்ல பெயர் எடுத்து செல்வாக்குடன் உள்ளது. அதனால், பொதுமக்களின் மனநிலை எங்களுக்கு சாதகமாக இருக்கும் போது தேர்தலை ஒத்திவைக்க எந்த காரணமும் இல்லை திமுகவின் மற்றொரு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தின் பாதிப்பை மதிப்பிடுவதில் அரசு மிக வேகமாக இருப்பதாக இருப்பதாகக் கூறிய திமுகவின் மற்றொரு வட்டாரம், “வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிககியில் முதலமைச்சரும் அமைச்சர்களும் களத்தில் உள்ளனர். ஆங்காங்கே புகார்கள் வந்தாலும், வெள்ள பாதிப்பை அரசு கையாண்ட விதத்தை மக்கள் பெரிதாக விமர்சிப்பதில்லை. பேரிடர் காலத்தில் முதலமைச்சர் களத்தில் இருப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.” என்று தெரிவிக்கின்றனர்.
மேலும், “முந்தைய அதிமுக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் கருத்துகளும், பா.ஜ.கவின் அரசியல் குளறுபடிகளும் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. எனவே, வெள்ள மீட்பு பணிகளை திறம்பட முடித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கினால், அது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அலைகளை முழுமையாக நமக்குச் சாதகமாக மாற்றும்” என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், வெள்ளம் மற்றும் நிவாரணப் பணிகள் முடியும் வரை தேர்தல் குறித்த முடிவு கூட பரிசீலிக்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சுற்றியுள்ள அரசியல் விவாதங்கள் பற்றி தெரியாது. வழக்கமான விவாதத்தின் போது தேர்தல் பிரச்சினை சுருக்கமாக இடம்பெற்றிருக்கலாம். தற்போது, வெள்ள நிவாரணம் தான் அரசின் முன்னுரிமை. இந்தத் தருணத்தில் தேர்தல் தொடர்பான விஷயங்களைக் கருத்தில் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.