Thirunelveli: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த காற்றாற்று வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. கனமழையால் மக்கள் வீடுகளுக்குள் நீர் புகுந்தது, சில இடங்களில் மக்கள் வீடுகளை இழந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக விவசாயமும், விளை நிலங்களும் பெரும் பாதிப்பை அடைந்தன. இதில் பூ பயிரிடப்பட்டதும் முற்றிலும் பாதிப்பு உள்ளாகியது. நெல்லையின் சுரண்டை, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பூ அதிக பயிரிடப்படும் நிலையில், மழை பாதிப்பால் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
விண்ணை முட்டும் பூக்களின் விலை
அந்த வகையில், இன்று மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ 6 ஆயிரம் ரூபாயாகவும், பிச்சுப் பூவின் விலை ஒரு கிலோ 2500 ரூபாய், கேந்தி பூவின் விலை ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது. இதேபோல் கனாகம்பரம் ரோஜா, முல்லை, பச்சைபூ உட்பட மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
நாளை தை மாதத்தின் முதல் முகூர்த்தம் என்பதால் பூக்கள் விலை உயர்வை கண்டுள்ளதாகவும், பெரும்பாலான கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறுவதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“