flying squad checking MK Stalin staying hotel : தேர்தல் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடி சென்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்தார். ஏற்கனவே முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்த ஸ்டாலின், ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று முதல் 2 ஆம் கட்ட பிரச்சாரத்தை துவங்க உள்ளார்
ஸ்டாலின் எப்போது தூத்துக்குடி சென்றாலும் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள சத்யா ரிசார்ட்டில் தங்குவது வழக்கம். ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஸ்டாலின் இன்று மாலை பிரச்சாரத்தை துவங்குவதால் காலை முதல் அவர் ஓய்வு எடுக்க சத்யா ரிசார்ட்டில் அறை புக் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த அறையில் தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் தீடீரென்று இன்று காலை சோதனையில் ஈடுப்பட்டனர். பணம்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் பறக்கு படையினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ள வேன், அரசியல் தலைவர்கள் வந்த கார் ஆகியவற்றிலும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். தேர்தல் பறக்கும் படையினரின் இந்த அதிரடி சோதனை திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் சோதனையின் முடிவில் பணம் எதுவும் சிக்கவில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.