அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது பறக்கும் படை அதிகாரி, தேர்தல் நடத்தை விதியை மீறியதாகவும், அச்சுறுத்தியதாகவும் கூறி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பறக்கும்படை தலைமை அலுவலர் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் மாரிமுத்து உத்துப்பட்டி பிரிவில் கடம்பூர் ராஜூவின் வாகனங்களை சோதனையிட முற்பட்ட போது, அமைச்சர் அந்த பணியை மேற்கொள்ளவிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது. வாகன சோதனை மேற்கொள்ள ஒத்துழைக்கவில்லை. அமைச்சர் வாகன சோதனை மேற்கொள்ள வந்த அதிகாரியை திட்டியதாகவும் மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்க
இந்த புகாரில் உண்மையில்லை என்று அமைச்சர் ராஜூ மறுப்பு கூறியுள்ளார். தன்னுடைய வாகனம் மற்றும் தன்னுடன் வந்த இரண்டு தொண்டர்களின் வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். சோதனை முடிந்த பிறகு அவர்களை அனுப்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். அவர்களையும் அனுப்பவில்லை. எனக்கு கோவில்பட்டியில் அப்போது பொதுக்கூட்டம் இருந்தது இருப்பினும் என்னையும் வெகுநேரம் காக்க வைத்தனர். மற்ற இரண்டு வாகனங்களை சோதனையிட்டு முடிக்கும் வரையில் நான் காத்திருந்தேன். அவர்கள் கூறும் புகார்கள் உண்மையற்றவை. இதில் சதி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் வாகனத்தை சோதனையிடுவதற்கு முன்பு அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமாரின் வாகனம் சோதனையிடப்பட்டது. மார்ச் 2ம் தேதி அன்று கழுகுமலைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது பறக்கும்படையினர் சோதனையை தொடர்ந்து வாகனத்தில் இருந்த கட்சி கொடிகளை செல்வகுமார் நீக்கியதாக கூறப்படுகிறது. மாவட்ட வருவாய்துறை அதிகாரி கண்ணபிரானை இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான டாக்டர் கே. செந்தில்ராஜ் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil