புதுச்சேரி மாநிலத்தின் நிதி நிலைமை, எதிர்கால திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி மாநில வளர்ச்சி பணிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்தும் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 7) ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி மாநிலத்தின் நிதி நிலைமை, எதிர்கால திட்டங்களுக்கான தேவையான நிதி உதவி, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“