தனியார் மயமாக்கப்பட்ட காலத்தில், சென்னை விமான நிலையத்தின் மோசமான தரத்தை விமர்சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Advertisment
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி. தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்திய அணியில், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹேமங் பதானி, கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், புத்தாண்டு அன்று சென்னை விமான நிலையத்தில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி, சென்னை விமான நிலையத்தின் மோசமான தரத்தை விமர்சித்துள்ளார். அதிலும், தனியார் மயமாக்கப்பட்ட காலத்தில் மோசமாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது 2023 ஆனால், 1983 போல தெரிகிறது என்று சென்னை விமான நிலையத்தின் மோசமான தரத்தை விமர்சித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “அன்புள்ள சென்னை விமான நிலையத்திற்கு எனது இந்த புத்தாண்டை ஒரு அற்புதமாக தொடங்கியதற்கு நன்றி. இது 2023, இது போன்ற மோசமான தரத்தால், இது 1983 போல் தெரிகிறது. அதுவும் தனியார்மயமாக்கப்பட்ட காலத்தில்” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"