தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கிறது. பிரதமர் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் உலக முழுவதிலும் இருந்து வருகை தந்துள்ள போராட்டியாளர்களுக்கு 700 வகை உணவுகள் பரிமாறப்பட இருக்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்திலிருந்து,கீழ்காணும் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் சர்வதே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், விருந்தினர்களுக்கு 700 வகை உணவுகள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த 77 உணவு பட்டியல்கள் உருவாக்கபட்ட அதில் 53 பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உணவுப் பட்டியலை உருவாக்கிய 75 வயதான செஃப் தால்வர் கூறுகையில் “ ஒரு முறை பரிமாறப்பட்ட உணவு மறுமுறை இடம்பெறக் கூடாது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா, ஆசியா, கான்டினென்டல் உணவு வைகைகள் காலை உணவு முதல் இரவு உணவாக வரை வழங்கப்பட உள்ளது. ” கிட்டதட்ட ஒரு வாரம் வரை உணவு பட்டியல் தொடர்பாக பல மாற்றங்கள் செய்து, ஒரு முறை இடம் பெற்ற உணவுகள் மீண்டும் இடம் பெறாமல் இருப்பதுபோல் பட்டியலிட்டுள்ளேன். காலை டீ, முதல் இரவு வழங்கப்படும் இனிப்பு வகை வரை எல்லா உணவுகளும் வித்தியாசமாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு பிரெத்யேகமான வையின், பீர், சீஸ் இடம் பெறும் உணவு வகைகள் தயாரிக்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார். பல்வேறு உணவகங்களிருந்து உணவுகள் வரவைக்கப்பட உள்ளது. தினமும் என்ன உணவு பட்டியலை உணவகங்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஸ்தாவின் வடிவம் வரை எல்லாம் முன்பாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 23 நான்கு நட்சத்திர உணவகங்கள், 5 நட்சத்திர உணவகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதுபோல 14 இரண்டு மற்றும் மூன்று நட்சத்திர உணவகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. என்று அவர் தெரிவித்துள்ளார்.