பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் தினசரி உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வாரத்திற்கு 2 முறை சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், பசியின்றி கல்வி கற்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் முதல்வர் ஸ்டாலினால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டம் படிப்படிப்பாக அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவு பட்டியல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி,
திங்கட்கிழமை (உப்புமா வகை) - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா/சேமியா/அரிசி/கோதுமை ரவா உப்புமா
செவ்வாய் கிழமை (கிச்சடி வகை) - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி/ சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி/கோதுமை ரவை கிச்சடி
புதன்கிழமை (பொங்கல் வகை) - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல்/ வெண் பொங்கல்
வியாழக்கிழமை (உப்புமா வகை) - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா/சேமியா/அரிசி/கோதுமை ரவா உப்புமா
வெள்ளிக்கிழமை (கிச்சடி வகை) - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி/ சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி/கோதுமை ரவை கிச்சடி ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம், ஒரு மாணவ/மாணவியருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி/ ரவை/ கோதுமை ரவை + காய்கறிகள் என வழங்க வேண்டும். சமைத்த பின் உணவு 150-200 கிராம் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“