/indian-express-tamil/media/media_files/yggsvO02oSR8bV5h4tNz.jpg)
சென்னை அதிகனமழை வெள்ளத்தால் இதுவரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளன என மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Michaung Cyclone: வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இது சென்னையிலிருந்து 310 கி.மீ திசையில் நிலைகொண்டது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும்.
வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.
புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுன்னது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Food being prepared in 20 kitchens and distributed in 162 relief centres of #GCC.
— Greater Chennai Corporation (@chennaicorp) December 4, 2023
Zone 10 #GCC community center at Ambedkar Street. (1/3)#CycloneMichaung#ChennaiRains#ChennaiCorporation#HeretoServepic.twitter.com/8QWhmA7kOo
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டுவருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 162 முகாம்களுக்கு, 20 உணவு கூடங்களில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டன.
சென்னை மழை காரணமாக கணேசபுரம், கெங்கு ரெட்டி, செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், மவுண்ட், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், சிபி சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர், ஆர்பிஐ சுரங்கபாதை, கோயம்பேடு, சேத்துப்பட்டு, சூளைமேடு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 37 இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us