சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அதிவேக பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிப்பாக சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களுக்கு விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இது மேலும் சில இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கணிசமான நினைவூட்டல். இனி சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை. மேலும் அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ ரயில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.