இரவில் 2 கைப்பிடி இந்த தானியம் ஊற வைத்து, காலையில் சூப்... கெட்ட கொழுப்பு குறைக்க டாக்டர் உஷா நந்தினி அறிவுரை

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க இரவில் 2 கைப்பிடி அளவு இந்த தானியத்தை ஊறவைத்து காலையில் சூப் செய்து சாப்பிட வேண்டும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
kollu soup

கொள்ளு சூப்

தினசரி ஏதாவது ஒரு சூப் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும் என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். இவை ஒட்டு மொத்த உடல் எடையை குறைக்கவும், வயிற்று பகுதியை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைக்கவும் பயன்படுகிறது என அவர் கூறுகிறார். மேலும் இதுகுறித்து அவர் தனது டாக்டர் மிஸ் உஷா நந்தினி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

Advertisment

உடல் எடையை குறைப்பதில் கொள்ளுவிற்கு முக்கிய பயன்கள் உள்ளது. எனவே கொள்ளுவை உணவில் சேர்ப்பது நமது உடலில் தேவையில்லாமல் இருக்கும் ஊளைச் சதையை குறைக்க உதவும். 

தேவையான பொருட்கள்:

கொள்ளு
பெருங்காயத்தூள்
சீரகத்தூள்
உப்பு

Advertisment
Advertisements

செய்முறை

உடல் எடை மட்டுமின்றி இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் குறைக்க கொள்ளு சூப் உதவுகிறது என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். 

உடல் எடையை குறைக்க கொள்ளு!

கொள்ளை இரவு நேரத்தில் ஊறவைத்து விட்டு, காலையில் அதனை வேக வைத்து அதன் தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் சிறிதளவு பெருங்காயத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து குடிக்கலாம்.

தினசரி உணவில் கொள்ளுவை சேர்த்து கொண்டு வந்தால் நம் உடலில் நல்ல மாற்றத்தை காணலாம். அதுமட்டுமின்றி அதனுடன் சேர்த்து உடற்பயிற்சி செய்வதும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Fat burning foods for weight loss Best tips to lose hip fat quickly

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: