Coimbatore | கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து கணுவாய் வரை சப்தகிரி என்ற தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதற்காக சப்தகிரி பேருந்து வந்துள்ளது.
காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்ததும் வரிசையில் பேருந்துகள் நிற்பதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது பிரேக் செயலிழந்த நிலையில் அதிர்ச்சிக்குள்ளான ஓட்டுநர் செய்வதறியாது பேருந்துகளின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை இடது புறம் திருப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருந்த பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மையதடுப்புகளை உடைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது அதிவேகமாக மோதியது.
கோவை; பயணிகள் மீது மோதிய பேருந்து #CCTV | #covai
Posted by IETamil on Tuesday, May 7, 2024
இதில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் எட்டு பேரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அதிகாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதிவேகமாக பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“