Advertisment

முதன்முறையாக நவக்கிரகக் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - அரசு போக்குவரத்துத்துறை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நவகிரகக் கோயில்களுக்கு முதன்முறையாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முன்பதிவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

author-image
WebDesk
New Update
nine planet busses

நவக்கிரகக் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நவகிரகக் கோயில்களுக்கு முதன்முறையாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முன்பதிவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், அவர் தெரிவிக்கையில்; பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு,  ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே பேருந்தில் புறப்பட்டு  எந்த ஒரு சிரமமும் இன்றி பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்து இயக்கத்தை வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதற்கு பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 750/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மூன்று நபர் வாடகை கார் மூலம் நவகிரக கோவில்களுக்கு சென்று வருவதற்கு தோராயமாக குறைந்தது 6,500/ ரூபாய் வாடகையாக மட்டும் செலவு செய்ய வேண்டிய நிலையில், மூன்று நபருக்கு ரூபாய் 2250/- மட்டும் இருந்தாலே நவகிரக கோவில்களுக்கு சென்று சிறந்த முறையில் தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்கின்ற செய்தி பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நவக்கிரக ஆன்மிக சுற்றுலா பேருந்து பயணத்திட்டம் சிறந்த பேருந்து பயணத்திட்டமாக அமையும் என ஆன்மிக அன்பர்கள் கருதுகின்றனர்.

அதன்படி, நவகிரக சிறப்பு பேருந்தானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 06:00 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம், இரண்டாவதாக திங்களூரிலிருந்து ஆலங்குடி சென்று காலை 07:15 மணிக்கு அங்கு குரு பகவான் தரிசனம் பின்பு காலை உணவு இடைவேளை, பின்பு, ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 09:00 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம், பின்பு 10:00 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம், பிறகு காலை 11:00 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், காலை 11:30 மணிக்கு வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் கிரக தரிசனம், மதியம் 12:30 முதல் 01:30 வரை மதிய உணவு இடைவேளை, மதியம் 2:30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம், மாலை 4:00 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், மாலை 4:45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம் மாலை 06:00 மணிக்கு புறப்பட்டு இரவு 8:00 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும் வகையில் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24.02.2024 முதல், வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும் நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் கீழ்கண்ட இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. www.Instcin (Mobile App) Android/I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

மேற்படி, ஆன்மிக அன்பர்கள் நவக்கிரக சுற்றுலா பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் மண்டலம் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment