கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பல நாட்களாக சுற்றி திரிந்த புலி நேற்று இரவு வனத்துறை வைத்த கூண்டில் பிடிபட்டது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முப்பாடி என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் அதிகளவில் புலிகள் இருந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கிராமப் பகுதிகளில் சுற்றி வந்த புலி, கிருஷ்ணகிரி, தைலப்பாடி போன்ற தோட்டங்களில், இரண்டு ஆடு மற்றும் ஒரு குட்டி ஆடு ஆகியவற்றை வேட்டையாடியது.
இதனால் வயநாடு பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் உடனடியாக புலியை பிடித்து வனத்தில் விட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் புலியை பிடிக்க கூண்டு வைத்து இரவு பகலாக காவல் காத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வனத்துறை வைத்த கூண்டில் புலி சிக்கியது. புலி பிடிபட்டது, ஒரு பக்கம் அங்குள்ள மக்கள் மத்தியில் சமாதானத்தை அளித்தாலும், கூண்டில் சிக்கிய புலி ஆக்ரோஷத்தில் உறுமியது அங்கிருந்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“