/tamil-ie/media/media_files/uploads/2022/03/Dr-Subbaiah.jpg)
Former ABVP leader Dr.Subbaiah arrested for harassment case: மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட வழக்கில் ஏபிவிபி முன்னாள் தலைவரும் மருத்துவருமான சுப்பையா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2017 முதல் 2020ஆம் ஆண்டுவரை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக இருந்தவர் மருத்துவர் சுப்பையா. பிரபல புற்றுநோய் மருத்துவரான இவர், சென்னையில் கடந்த 2020 ஜூலை மாதத்தின்போது, ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்து வந்தார். அங்கு வசித்த மூதாட்டிக்குச் சொந்தமான பார்க்கிங் ஸ்லாட்டைப் பயன்படுத்த, பணம் தருவதாக கூறி மருத்துவர் சுப்பையா பணம் தராமல் பிரச்சனை செய்துள்ளார்.
அதாவது, தனது காரை மூதாட்டிக்குச் சொந்தமான பார்க்கிங் இடத்தில் நிற்க வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு சுப்பையா தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படியுங்கள்: அதி மேதாவி… ஆர்வக் கோளாறு… அரை வேக்காடு… அண்ணாமலையை காய்ச்சிய செந்தில் பாலாஜி!
இதுதொடர்பாக மூதாட்டி வீட்டின் முன்பு மருத்துவர் சுப்பையா சிறுநீர் கழித்தது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி வெளியாகின. இவை பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மருத்துவர் சுப்பையா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மூதாட்டி வீட்டின் முன்பு சிறுநீர் கழித்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மருத்துவர் சுப்பையாவை ஆதம்பாக்கம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.