Advertisment

69% இடஒதுக்கீடு கொடுத்தது கருணாநிதியா? பிரகாஷ் ராஜூக்கு ஜெயக்குமார் கண்டனம்

அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது; வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் – அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

author-image
WebDesk
New Update
Jayakumar and Prakash raj

வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் – அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார் நகைப்பை ஏற்படுத்துவதாகவும், வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் கலைஞரை மீண்டும் நேரில் சந்திப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் 'காலம் உள்ளவரை கலைஞர்' என்ற கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சியை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், “கலைஞர் இருக்கும் வரை எவரும் இங்கு வாலாட்ட முடியவில்லை. கலைஞர் இல்லை என்றால் இன்று நான் ஐ.ஏ.எஸ் ஆபிஸராக இருக்க மாட்டேன் என்று ஒரு அதிகாரி சொல்கிறார். 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக போராடி வரும் நிலையில் எப்போதோ 69 சதவீத இட ஒதுக்கீட்ட்டை கொண்டு வந்தவர் கலைஞர்," என்று கூறினார்.

இதனையடுத்து 69% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது கருணாநிதி இல்லை என பிரகாஷ் ராஜூக்கு அ.தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”வரலாற்றை எண்ணி பார்க்காமல் எதாவது புகழ வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்றது போல நடிகர் பிரகாஷ்ராஜ் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது. 

69% இடஒதுக்கீட்டை மத்திய அரசு வரைமுறைபடுத்த எண்ணும் போது தமிழ்நாட்டில் அன்றைய முதல்வராக இருந்த அம்மா (ஜெயலலிதா) சமூக நிதிக்கு எதிராக அமைந்துவிடும் என கடுமையாக எதிர்த்தார். 

பின்னர் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆலோசனைக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த நான் சட்டமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளித்தேன். 

இதன் பின்னர் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிசட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜெயலலிதா தலைமையில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. 

பின்னர் நீண்ட வலியுறுத்தலின் மூலம் குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-24, அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது. இதற்காக தான் திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஜெயலலிதாவுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார். 

இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமால் அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது! மிகவும் தரம் தாழ்ந்து போன எண்ணத்தின் விளைவு தான் இந்த பேச்சு! 

இது போன்று வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Prakash Raj D Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment