Advertisment

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி

ஜெயக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, சட்டவிரோதமாக கூடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

author-image
WebDesk
New Update
Jayakumar arrest, ex minister jayakumar arrest, aiadmk leader jayakumar arrest, ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது, ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம், ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல், jayakumar arrest for dmk cadre attack, aiadmk, ops eps condemns for jayakumar arrest, dmk, tamilnadu, jayakumar remanded

அதிமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisment

கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை மார்ச் 7-ஆம் தேதி காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமின் கோரி ஜெயக்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று (பிப்.23) ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஜாமின் வழங்கலாம் என்பதால் ஜாமின் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று வாதம் முன்வைத்தார். மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

நரேஷ் தரப்பு வழக்கறிஞர், இவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது. அவருக்கு ஜாமின் வழங்கினால் புகார் அளித்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று வாதம் முன்வைத்தார். காவல் துறை தரப்பில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

307ஆவது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்று ஜாமின் கோருமாறு கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று (பிப்.23) ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்க உத்தரவிட்டார்.

முன்னதாக, ஜெயக்குமாருக்கு சிறையில் முதல் வகுப்பு தரவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார். இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாக நீதிபதி உறுதியளித்தார்.

வாக்கு எண்ணிக்கை முந்தைய நாள் இரவு அமைச்சர் ஜெயக்குமாரை  போலீஸார் கைது செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது அவர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப் பதிவு அன்று ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.

அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகின.

அதிமுகவினரின் தாக்குதலில் காயமடைந்த நரேஷ் என்ற அந்த நபர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பிப்ரவரி 21 இரவு 8:30 மணிக்கு ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். இரவு 10:30 மணி வரை ஜெயகுமார் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை.

இப்படியும் ஒரு தோல்வி.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்குக் கூட பெறாத வேட்பாளர்கள்!

ஜெயக்குமாரை அன்று நள்ளிரவு 12:00 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தனர்.

மார்ச் 7ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்காக ஜெயக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, சட்டவிரோதமாக கூடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment