கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருப்பதைத் தடுப்பதற்கு ஒன்றும் செய்யாமல் காவல்துறையை தமிழக முதல்வர் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி மீது பொய் வழக்குகள் போட்டு அடக்கி விடலாம், ஒடுக்கி விடலாம் என நினைக்கிறது எப்போதும் நடக்காது என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திங்கள்கிழமை கூறினார்.
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் தங்கணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் திருச்சி மத்திய சிறைக்கு வருகை தந்தனர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை தடுப்பதற்கு ஒன்றும் செய்யாமல் காவல்துறையை தமிழக முதல்வர் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி மீது பொய் வழக்குகள் போட்டு அடக்கி விடலாம், ஒடுக்கி விடலாம் என நினைக்கிறது எப்போதும் நடக்காது.
இன்றைக்கு முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது விரைவில் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என்று நிரூபித்து அவர் விரைவில் வெளியே வருவார். தமிழகத்தில் சட்டம் இருந்து சந்தி சிரிக்கிறது. திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் பிடிக்கவில்லையே என்ற கேள்விக்கு? அதை கூட்டணி கட்சித் தலைவரை போய் கேளுங்கள் என பதிலளித்துவிட்டு சென்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“