New Update
/
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரை வரவேற்று பேனர் வைத்த திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான தடகளப் போட்டி நடந்தது. இதில் அ.தி.மு/க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரவேற்று அண்ணா விளையாட்டு அரங்கில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்தின் காரணமாக, திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக விடுதி காப்பாளர் கண்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த தகவல் அமைச்சர் கே.என். நேருவுக்கு தகவல் சென்றதாகவும், இதையடுத்தே இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் கே.என். நேருவை சமாதானம் செய்த நிலையில் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்த சில பிளக்ஸ் பேனர்கள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும், சிலர் பேனர்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்தும், சாய்த்தும் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு போட்டி நடைபெற்றது. தி.மு.க ஆட்சி நடக்கும் நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரின் பேனர்கள் திருச்சியில் வைக்கப்பட்டிருந்தது தி.மு.க-வினரை கோபத்தில் உள்ளாக்கியதோடு, விளையாட்டு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முக வடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.