d-jayakumar | மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பொன்முடி மனைவியும் தண்டிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு பேசிய முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், “ஊழல் செய்த பொன்முடி தப்பிக்க முடியாது” என்றார்.
இது குறித்து அவர், “பொன்முடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். சென்னை உயர் நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை கொடுத்துள்ளது.
தற்போது ஒரு விக்கெட்தான் விழுந்துள்ளது. இன்னும் சில நாள்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழும் என்றார்.
தொடர்ந்து, அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்து பேசுகையில் அவை ஜோடிக்கப்பட்ட வழக்குகள் என்ற டி. ஜெயக்குமார், “திமுகவுக்கு இது ஜெயில் காலம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“