அதிமுக முன்னாள் அமைச்சரின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சரோஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் திங்கள்கிழமை ஒத்திவைத்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சரோஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் திங்கள்கிழமை ஒத்திவைத்தார்.

author-image
WebDesk
New Update
Former AIADMK Minister saroja, saroja anticipatory bail application hearing postponed, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு, aiadmk, namakkal, tamil news, tamil nadu news

அதிமுக முன்னாள் அமைச்சரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சரோஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் திங்கள்கிழமை ஒத்திவைத்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் நெருங்கிய உறவினர்களான ராசிபுரத்தைச் சேர்ந்த தம்பதி, அங்கன்வாடிகளில் பணிபுரியும் 15 பேருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.76.50 லட்சம் பெற்றதாகவும் ஆனால், அவர்களுக்கு பணி ஆணை கடிதம் வழங்காமல் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அக்டோபர் 27ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் சரோஜா கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த, அதிமுக ஆட்சியில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறையின் அமைச்சராக இருந்த சரோஜா அக்டோபர் 29ம் தேதி நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரும் அவரது கணவர் லோகரஞ்சனும், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் மீதான விசாரணையை, நவம்பர் 10ம் தேதிக்கு, நீதிபதி ஒத்தி வைத்தார்.

Advertisment
Advertisements

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Aiadmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: