Advertisment

மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக எம்.பி.-க்கு 7 ஆண்டு சிறை தண்டனை

வங்கி கடன் மோசடி வழக்கில் ஸ்ரீபெரும்புதுார் மக்களவை தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 1 கோடியே 11 லட்சம் அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Former AIADMK MP KN Ramachandran, AIADMK ex MP KN Ramachandran, மோசடி வழக்கு, அதிமுக முன்னாள் எம்பிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, அதிமுக முன்னாள் எம்பி கேஎன் ராமச்சந்திரன், வங்கி மோசடி வழக்கு, AIADMK ex MP KN Ramachandran sentenced to 7 years jail, Bank fraud case, KN Ramachandran gets 7 years jail, penalty rs 1 crore to kn ramachandran, chennai news, chennai high court news, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil, தமிழ், சென்னை, தமிழ்நாடு, tamil news live, latest news in tamil, latest tamil news, tamil latest news, tamil nadu news

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

கடந்த 2014 ஆண்டு முதல் 2019 வரை ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத்தொகுதியின் அதிமுக உறுப்பினராக இருந்த கே.என்.ராமச்சந்திரன் கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.

அந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமசந்திரன் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, விண்ணப்பத்தை பரிசீலிக்க, தனக்கும் குடும்பத்தாருக்கும் அமெரிக்கா சென்று வர விமான கட்டணமாக 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை பெற்ற மேலாளர் தியாகராஜன் 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரி தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த கே.என்.ராமச்சந்திரன், அறக்கட்டளை ஆகியோர் மீது 2015-ம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரித்து வந்தார்.

அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த வாரம் வழக்கின் தீர்ப்பை நீதிபதி லிங்கேஸ்வரன் தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சிபிஐ தரப்பில் நிரூபிக்கபட்டுள்ளது. எனவே, கே.என். ராமசந்திரன், ராஜசேகரன் (கே.என்.ராமச்சந்திரன் மகன்),

வங்கி மேலாளர் தியாகராஜன், ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

பின்னர், தண்டனை விபரங்களை அறிவித்த நீதிபதி, வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், கே.என்.ராமசந்திரன் மகன் ராஜசேகரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் அபராதமும், கே.என்.ராமசந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் அபராதமும் கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Tamil Nadu Chennai Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment