scorecardresearch

சொத்து குவிப்பு வழக்கு: ஓய்வு பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு உதவி கமிஷனருக்கு ஜெயில் தண்டனை

முன்னாள் ஏ.எஸ்.பி.,யான வசந்தகுமாரின் சொத்து மதிப்பு அவரது வருமான ஆதாரங்களை விட, 50 சதவீதத்துக்கு மேல் இருப்பதாக குற்றம் சட்டப்பட்டார்.

madras high court

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பதால் முன்னாள் ஏ.எஸ்.பி.,க்கு ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்தது என்னவென்றால், முன்னாள் ஏ.எஸ்.பி.,யான வசந்தகுமாரின் சொத்து மதிப்பு அவரது வருமான ஆதாரங்களை விட, 50 சதவீதத்துக்கு மேல் இருப்பதாக குற்றம் சட்டப்பட்டார்.

அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதால் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார் 1991 முதல் 2000 வரை தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றியவர். மதுரை காவல் உதவி ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

விசாரணைக்குப் பிறகு, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம், ஓய்வு பெற்ற அதிகாரி மீது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்தது.

ஆனால், ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் 2014ல் வசந்தகுமாரை விடுதலை செய்தது. அவர் சேர்த்ததாகக் கூறப்படும் சொத்து மதிப்பு அவரது வருமானத்தில் 50 சதவீதத்துக்கு மேல் இல்லை என்றும், அதை பரிசீலிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும், இந்த உத்தரவு சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் டி.வி.ஏ.சி., உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் விசாரணையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, வசந்த குமார் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அப்போது ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Former asp one year imprisonment for illegal property madras high court