scorecardresearch

கலைஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு: 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறும் என அறிவிப்பு

பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து பாடம் இடம்பெற உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி
Karunanidhi

பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து பாடம் இடம்பெற உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்கு குறித்து பாடதிட்டத்தில் இடம் பெறும் என்று தெரிவித்தார்.  ’செம்மொழியான தமிழ் மொழி’ என்கிற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் இடம் பெறும் என்று அவர் கூறினார்.

முன்பு திமுக ஆட்சி செய்த காலத்தில், கருணாநிதி எழுதிய செம்மொழி பாடல் ஏற்கனவே பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து பாடதிட்டத்தில் இடம் பெற உள்ளது. வரும் கல்வியாண்டில், 9ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்த பகுதி இடம் பெற உள்ளது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பட புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிவித்திருந்தார். வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதலே இந்த பாடப் பகுதி இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான பாடப் பகுதி இறுதி செய்யப்பட்டு அச்சடிக்கும் பணியில் உள்ளது. இந்த ஆண்டு 9ம் வகுப்பு தமிழ் பாட புத்தகம் வழங்கும்போது, கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த தொகுப்பும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Former chief minister karunanidhi contribution to tamil language in 9th standard lesson

Best of Express