scorecardresearch

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி கைது

Former CM EPS personal assistant Mani arrested for fraud: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியை கைது செய்த சேலம் காவல்துறையினர்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளரான மணி என்பவரை சேலம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக இருந்து வருபவர் மணி. சேலம் மாவட்டம் ஒமலூர் நடுப்பட்டியைச் சேர்ந்த மணி, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

புகாரில் தமிழ்செல்வன், போக்குவரத்துத்துறையில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி மணி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மணி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து மணி மற்றும் இடைத்தரகர் செல்வகுமார் ஆகிய இருவரும் பணம் வாங்கி மோசடி செய்ததாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதுமட்டுமில்லாமல் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததாக மணி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த மணி, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக மணி முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததது. இதனையடுத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணியை கைது செய்துள்ளனர்.  அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Former cm eps personal assistant mani arrested for fraud

Best of Express