former cm jayalalitha's poes garden house veda nilaiyam to be convert as memorial
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அவரது நினைவிடமாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பின்னர், அந்த நினைவு இல்லம், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதற்கான பணிகளை தமிழக அரசு துவங்கியது. இந்நிலையில், வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற எதிர்க்கட்சிகள் வரவேற்றாலும், அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தரப்பினர் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் இதற்கு எதிர்ப்பு குரல்கள் விடுத்தனர்.
Advertisment
இதற்கிடையே, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்கம் செய்யப்படும் அரசின் முடிவுக்கு போயஸ் கார்டன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இருப்பினும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லத்தை தவிர்த்து வேறு இடங்களில் நினைவில்லம் அமைத்தால் அது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதாக அமையும் என்றும் அதனால் பொதுமக்கள் உணர்வும் பாதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சார்பில் இறுதி அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், பொது நோக்கிற்காக வேதா இல்லம் நினைவிடமாக்கப்படுகிறது. வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வேதா இல்லத்தில் நில எடுப்பு பணிகள் தொடங்கவுள்ளது. போயஸ் தோட்டம் இல்லம் அமைந்துள்ள நிலத்திற்கு அடியில் எந்தவிதமான கனிம வளங்களும் இல்லை.
நில எடுப்பால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை. யாரையும் அப்புறப்படுத்தவோ, மறுகுடியமர்த்தவோ அவசியம் ஏற்படவில்லை. நில எடுப்பு தகவல்களை கிண்டியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பார்வையிடலாம். வேதா நிலையத்தில் 3 அடுக்கு கட்டிடம், 2 மா மரங்கள், ஒரு பலா மரம், 5 தென்னை மரங்கள் மற்றும் 5 வாழை மரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil